படம் | சர்வதேச செஸ் கூட்டமைப்பு (எக்ஸ்)
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 4-வது சுற்று!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.

முதல் சுற்றில் குஷேஷ் தோல்வியடைந்தார். இரண்டாவது சுற்று டிராவிலும், மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றியும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், 14 சுற்றுகள் கொண்ட இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்று டிராவில் முடிந்துள்ளது.

நடப்பு சாம்பியனான டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இளம் இந்திய வீரரான குகேஷும் 4-வது சுற்றில் சிறப்பாக விளையாடினர். போட்டியின் பாதியில் இருவரும் சிறு, சிறு தவறுகளை செய்தனர். 42 நகர்த்தல்களுக்குப் பிறகு இருவரும் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர்.

4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இருவரும் இரண்டு புள்ளிகள் பெற்று சமநிலையில் உள்ளனர். இருவருக்குமிடையேயான 5-வது சுற்று நாளை (நவம்பர் 30) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT