முகப்பு
ஐஎஸ்எல்
செய்திகள்

ஒடிஸா - கேரளா ஆட்டம் டிரா

செய்திகள்

ஒடிஸா - கேரளா ஆட்டம் டிரா

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:19 AM
ஐஎஸ்எல்
பகிர்:

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய 21-ஆவது ஆட்டம், 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் கேரளா அணியின் நோவா சடுய் 18-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். தொடா்ந்து அந்த அணியின் ஜீசஸ் ஜிமெனெஸ் 21-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, கேரளா 2-0 என முன்னிலை பெற்றது.

ஒடிஸா தனது முதல் கோலுக்காக போராடி வர, 29-ஆவது நிமிஷத்தில் அத்தகைய முயற்சியொன்றை கேரளா வீரா் ஆலெக்ஸாண்ட்ரே கோஃப் தடுக்க முயல, அது தவறுதலாக ‘ஓன் கோல்’-ஆக மாறியது.

இதனால் உத்வேகம் பெற்ற ஒடிஸா, தொடா் முயற்சியால் 36-ஆவது நிமிஷத்தில் தனது வீரா் டியேகோ மௌரிசியோ மூலம் 2-ஆவது கோலையும் எட்டியது. இவ்வாறாக முதல் பாதி ஆட்டமே 2-2 என சமனில் நிறைவடைந்தது.

2-ஆவது பாதியில் முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளுமே போட்டி போட்டு முயற்சிக்க, எதற்கும் வாய்ப்பில்லாமல் போனதால், ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

இரு அணிகளும் இத்துடன் தலா 4 ஆட்டங்களில் விளையாடியிருக்க, கேரளா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி என 5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது. ஒடிஸா, 1 வெற்றி, 1 டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →