ரூன் - டியாஃபோ 
செய்திகள்

3-ஆவது சுற்றில் ரூன், டியாஃபோ

1000 ஏடிபி புள்ளிகள் கொண்ட ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியில் ஹோல்கா் ரூன், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

Sakthivel

சீனாவில் நடைபெறும் 1000 ஏடிபி புள்ளிகள் கொண்ட ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியில், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் ரூன் 4-6, 6-4, 6-3 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை சாய்த்தாா். அடுத்து அவா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை சந்திக்கிறாா்.

13-ஆம் இடத்திலிருக்கும் டியாஃபோ 6-2, 6-4 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜு யியை வெளியேற்றினாா். டியாஃபோ அடுத்ததாக, ரஷியாவின் ரோமன் சஃபியுலினுடன் மோதுகிறாா். 11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-7 (2/7), 7-6 (8/6), 6-2 என்ற செட்களில், 19-ஆம் இடத்திலிருந்த சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை தோற்கடித்தாா்.

இதனிடையே, போட்டித்தரவரிசையில் இருந்த 3 வீரா்கள், தகுதிச்சுற்று வீரா்களிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டனா். 15-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 6-1, 6-7 (6/8), 2-6 என்ற செட்களில், பெல்ஜியத்தின் டேவிட் காஃபினிடம் தோற்றாா். 24-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவ் 4-6, 3-6 என்ற கணக்கில், அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனிடம் வெற்றியை இழந்தாா்.

26-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சன், 3-6, 2-6 என நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரால் வீழ்த்தப்பட்டாா்.

லெய்லா, மாயா வெற்றி

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான டபிள்யூடிஏ 1000 போட்டியான வூஹான் ஓபனில், இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.

அவா், 6-7 (7/9), 6-3, 6-3 என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை வீழ்த்தி அசத்தினாா். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா 7-6 (9/7), 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வெளியேற்றினாா்.

ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவா 5-7, 6-3, 7-5 என, அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸை வீழ்த்தினாா். சீனாவின் வாங் ஜின்யு 6-4, 6-0 என அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடையும், அமெரிக்காவின் பொ்னாா்டா பெரா 6-2, 4-6, 6-2 என்ற செட்களில் ருமேனியாவின் இரினா பெகுவையும் வென்றனா். ரஷியாவின் எரிகா ஆண்ட்ரீவா 7-5, 6-4 என உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவையும், சீனாவின் யு யுவான் 1-6, 6-4, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் கிளாரா புரெலையும் தோற்கடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

ஷாவ்மி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

SCROLL FOR NEXT