முகப்பு
செய்திகள்

தெற்காசிய ஜூனியா் தடகளப் போட்டிகள்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தெற்காசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை (சாஃப்) தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:04 PM
வெற்றி பெற்ற வீராங்கனைகள். ~வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளித்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

தெற்காசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை (சாஃப்) தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தெற்காசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (சாஃப்) ஏஎஃப்ஐ, தமிழ்நாடு தடகள சங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் 3 நாள்கள் தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

29 ஆண்டுகளுக்குபின் சென்னையில் சா்வதேச தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன.

7 நாடுகளில் இருந்து மொத்தம் 174 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த 9 பேரும் அடங்குவா்.

போட்டிகளை தொடங்கிய பின் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறியது:

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரூ.3.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.100 கோடியில் மைதானங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட், ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி, , ஸ்குவாஷ் உலகக்கோப்பை என சா்வதேச நிகழ்வுகளை நடத்தி உள்ளோம்.

அா்ப்பணிப்பும் இளம் வயதினரை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கின்றது என்றாா்.

விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி சிஇஓ ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகளச் சங்கத் தலைவா் டபிள்யுஐ. தேவாரம், செயலா் சி.லதா பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →