உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக கூகுள் படம்: எக்ஸ் / ஃபிடே
செய்திகள்

செஸ் வரலாற்றில் முதல்முறை..! உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக கூகுள்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல்முறையாக கூகுள் விளம்பரதாரராக செயல்படுமென அறிவித்துள்ளது.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 23 முதல் டிசம்பா் 15 -ஆம் தேதி வரை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரேன், இந்திய இளம் வீரா் டி. குகேஷ் ஆகியோா் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதவுள்ளனா்.

ஃபிடே, சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக கூகுள் விளம்பரதாரராக செயல்படுமென அறிவித்துள்ளது.

செஸ் வரலாற்றில் முதல்முறை

இது குறித்து கூகுளின் ஆசிய பசுபிக் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சிமோன் கான் கூறியதாவது:

இந்த வரலாற்று நிகழ்வை விளம்பரப்படுத்துவதில் கூகுள் பெருமை கொள்கிறது. செஸ் மனிதனின் புத்திக்கூர்மை, தொழில்நுட்ப திறனையும் இணைத்து விளையாடும் விளையாட்டு. மேலும் இதில் ஏஐ-க்கான களம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இதற்குமுன்பாக ஏஐ ஜாம்பவான்களுடன் சிறப்பாக செஸ் விளையாடியதையும் குறிப்பிடத்தக்கது. செஸ் ரசிகர்களுக்கு சாம்பியன்ஷிப் அனுபவத்தை அளிப்பதிலும் செஸ் போட்டியின் அழகினை கொண்டாடுவதிலும் தொடர்ந்து நம்மை உத்வேகமூட்டும் சவாலை அளிக்கும் செஸ் போட்டியை மேம்படுத்த யூடியூப், ஏஐ தேடுதல்கள் மூலம் முயற்சிக்கிறோம் என்றார்.

சிங்கப்பூர் செஸ் அமைப்பின் சிஇஓ கெவின் கோகூறியதாவது:

இந்தாண்டு உலக செஸ் சாம்பிஷன்ஷிப்பை கூகுள் பிரதிநிதித்துவப்படுத்துவது செஸ் மற்றும் சிங்கப்பூர் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முதல்முறையாக உலக அளவில் பிரசித்திபெற்ற ஒரு நிறுவனம் செஸ் நிகழ்ச்சியினை விளம்பரப்படுத்துகிறது. செஸ் என்பது பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பான விளையாட்டு. கூகுள் இதில் சிறப்பு கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

138 ஆண்டுகளில் முதன்முறை

உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 138 ஆண்டுகளில் முதன்முதலாக ஆசியாவைச் சோ்ந்த இரு வீரா்கள் மோதுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற விடுதியான சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. நடுவா்கள், வீரா்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என உள்ளூா் போட்டி அமைப்பாளா் கெவின் கோ கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT