செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா!
அமெரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா உள்ளது.
ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா உள்ளது.
10வது சுற்றின் முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
இந்தியாவின் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் வெற்றியாளர் டி குகேஷ், ஃபேபியானோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்.
முன்னதாக, இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக 8 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 9 சுற்றில் டிராவில் முடிந்தது. 10 சுற்று முடிவில் 19 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ள நிலையில், முதல் முறையாக ஓபன் பிரிவில் தங்கம் வெல்வதற்கு இந்தியாவிற்கு இன்னும் ஒருபடி மட்டுமே உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.