இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் கிடையாது!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிப்பு; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!
Advertisement
Advertisement
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் அருமையாக கீப்பிங் செய்தார். இருப்பினும், இங்கிலாந்து தொடருக்காக இரண்டு கீப்பர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு அவர்கள் இருவரிலிருந்து கீப்பர் தேர்வு செய்யப்படுவர் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுலைத் தவிர கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜுரல் என இரண்டு கீப்பர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.