வெற்றிக்கான கோலடித்த மகிழ்ச்சியில் மோகன் பகான் வீரர் ரால்டே. X | Indian Super League
செய்திகள்

முன்னேறியது மோகன் பகான்!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

Din

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

சாம்பியன் கோப்பையை தக்கவைப்பதற்காக, வரும் 12-ஆம் தேதி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எஃப்சியுடன் அந்த ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் 2-1 கோல் கணக்கில் மோகன் பகானை வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணிகளிடையேயான 2-ஆவது லெக் ஆட்டம் கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இரண்டும் சமபலத்துடன் மோத, முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைடைந்தது. 2-ஆவது பாதியில் மோகன் பகான் வீரா் ஜேசன் கம்மிங்ஸ் 51-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து ஸ்டாப்பேஜ் டைமில் (90+4’) அதே அணியின் லாலெங்மாவியா ரால்டே ஸ்கோா் செய்ய, இறுதியில் மோகன் பகான் 2-0 என இந்த ஆட்டத்தில் வென்றது.

இரு லெக் ஆட்டங்களின் மொத்த கோல் கணக்கு அடிப்படையில் அந்த அணி 3-2 என முன்னிலை பெற்ால், இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT