முகமது சாலா  படம்: எக்ஸ் / லிவர்பூல்
செய்திகள்

லிவர்பூல் ரசிகர்கள் மகிழ்ச்சி: முகமது சாலாவுக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு!

லிவர்பூல் கால்பந்து அணியில் முகமது சாலாவுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது குறித்து...

DIN

லிவர்பூல் கால்பந்து அணியில் முகமது சாலவுக்கு இரண்டாண்டு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் பதிலளிக்கும் விதமாக முகமது சாலா மீண்டும் லிவர்பூல் அணியில் புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஆண்டுக்கு 20 மில்லியன் யூரோ ஊதியமாக முகமது சாலாவுக்கு ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த 32 வயதாகும் முகமது சாலா 2017 முதல் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். அதில் 394 போட்டிகளில் 243 கோல்களும், 111 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டது.

ரசிகர்களால் எகிப்திய அரசன் என அழைக்கப்படும் முகமது சாலா இந்தாண்டுக்கான பேலன் தோர் (தங்கப் பந்து) விருது வாங்குவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

பிரீமியர் லீக்கில் 73 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

இதற்கு சாலா முக்கியமானவர் என்பதால், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது குறித்து லிவர்பூல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT