சூர்யகுமார் யாதவ் கிண்டல் செய்வதாக நினைத்தேன்: முகமது சிராஜ்
ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக இந்திய அணியில் தான் சேர்க்கப்பட்ட விஷயத்தை சூர்யகுமார் யாதவ் கூறியபோது கிண்டல் செய்ததாக நினைத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக இந்திய அணியில் தான் சேர்க்கப்பட்ட விஷயத்தை சூர்யகுமார் யாதவ் கூறியபோது கிண்டல் செய்ததாக நினைத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் நேற்று (பிப்ரவரி 7) கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய அணி மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகிய ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் அவர் இடம்பெற்றார்.
Advertisement
Advertisement
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சூர்யகுமார் யாதவிடமிருந்து வந்த அழைப்பு
இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அமெரிக்காவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விளையாடவில்லை.
ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக அணியில் இணைந்த முகமது சிராஜ் நேற்றையப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து முகமது சிராஜ் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு நாள்களுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னை தொலைபேசியில் அழைத்து, உங்களது பைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு வாருங்கள் எனக் கூறினார். அவரிடம் நான், விளையாடாதீர்கள் இதெல்லாம் எப்படி நடக்கும் என பதிலளித்தேன். அதற்கு அவர், நான் உண்மையாகத்தான் கூறுகிறேன். டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட தயாராக இருங்கள் என்றார்.
அதன் பின், இந்திய அணித் தேர்வுக் குழு உறுப்பினர் பிரக்யான் ஓஜா என்னை அழைத்து இது தொடர்பாக பேசினார். நமக்கு என்ன நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் எழுதியிருக்கிறாரோ அதனை யாராலும் மாற்ற முடியாது. நான் மும்பைக்கு விமானத்தில் பயணித்தபோது, இதெல்லாம் கனவு போன்று இருந்தது. ஏனெனில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவேன் என நான் நினைக்கவே இல்லை என்றார்.
Mohammed Siraj said he initially thought Suryakumar Yadav was joking when he told him that he had been included in the Indian team as a replacement for Harshit Rana.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.