மீண்டும் இந்திய அணியில் இடம்பெற உங்களது திட்டம் என்ன? சூர்யகுமார் யாதவ் பதில்!
இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றும் அசத்தியது.
35 வயதாகும் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பைத் தொடரின்போது, பெரிய அளவில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகும் அவரது வழக்கமான அதிரடி ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனையடுத்து, இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்து அவர் பேசியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு கடுமையாக உழைத்து வருகிறேன். எல்லாம் சரியாக சென்றால், இந்திய அணியில் நான் மீண்டும் இடம்பிடிப்பேன் என்றார்.
Former Indian team captain Suryakumar Yadav has spoken about making a comeback to the Indian team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.