FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக சரண்ஷ் ஜெயின் களமிறக்கப்படுவாரா?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குல்தீப் யாதவ் - (கோப்புப் படம்)
பகிர்:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மானவ் சுதர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினை மட்டுமே கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

போட்டியின் கடைசி நாள் சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமானதாக இருந்தது. இருப்பினும், குல்தீப் யாதவினால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கேப்டன் ஷுப்மன் கில்லும் குல்தீப் யாதவை மூன்றாவது சுழற்பந்துவீச்சு தெரிவாகவே பயன்படுத்தினார். போட்டியின் கடைசி நாளில் 11 ஓவர்கள் வீசிய் குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்காமல் 38 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

கடைசி நாளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மானவ் சுதர் இணைந்து 46.4 ஓவர்கள் வீசி, 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளரான குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் அவர் கைப்பற்றிய ஒரு விக்கெட்டும் கேப்டன் ஷுப்மன் கில்லின் சிறப்பான கேட்ச் முயற்சியால் கிடைத்ததாகும்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை அணியில் நிறைய இடதுகை ஆட்டக்காரர்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னரான சரண் ஜெயின் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என இந்திய அணி நிர்வாகம் நினைக்கலாம்.

கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன் பின், அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இலங்கை தொடருக்கு முன்பு போதிய அளவு பயிற்சி மேற்கொள்ளாததும் அவரது சராசரியான செயல்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடங்கும் நிலையில், அந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி மாற்றம் மேற்கொள்ளுமா அல்லது முதல் டெஸ்ட்டில் விளையாடிய அணியுடனேயே விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

summary

Doubts have arisen regarding whether Kuldeep Yadav will be included in the Indian team's playing XI for the second Test match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments