FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் இருப்பேன்; சூர்யகுமாருக்காக மனைவி வெளியிட்ட பதிவு!

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் இருப்பேன் என சூர்யகுமார் யாதவுக்காக அவரது மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

14 செப்டம்பர் 2026, 10:31 pm IST
சூர்யகுமார் யாதவ் - படம் | பிடிஐ
பகிர்:

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் இருப்பேன் என சூர்யகுமார் யாதவுக்காக அவரது மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சூர்யகுமார் யாதவ் இன்று (செப்டம்பர் 14) அவரது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய மனைவி தேவிஷா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தனது கணவருக்காக தேவிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது: என்னுடைய வீடு மற்றும் இதயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து வரிகளில் கூறியதைப் போல, நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் நான் இருப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் பல சாதனைகள் படைத்துள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இந்திய அணிக்காக 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 3272 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 25 அரைசதங்கள் அடங்கும்.

இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் 37 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Suryakumar Yadav's wife has shared a post stating that she will be with him wherever he is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments