FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கவுன்டி கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ்..! இந்திய அணிக்கு திரும்புவாரா?

இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவிருக்கும் குல்தீப் யாதவ் குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 5:27 pm IST
குல்தீப் யாதவ் - (கோப்புப் படம்)
பகிர்:

இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் இந்திய இடதுகை சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (31 வயது) விளையாட தேர்வாகியுள்ளார்.

இங்கிலாந்து கவுன்டியின் டாப் அணியான யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப்பில் எட்டு போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குல்தீப் யாதவ் 18 டெஸ்ட்டில் 79 விக்கெட்டுகளும் 121 ஒருநாள் போட்டிகளில் 194 விக்கெட்டுகளும் 54 டி20 போட்டிகளில் 94 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தியாவின் பிளேயிங் லெவனில் இடம்கிடைக்காத குல்தீப் யாதவ் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கவுன்டியில் விளையாடும் அவரது முடிவு ஆச்சரியம் அளித்துள்ளது.

கவுன்டியில் யார்க்ஷயர் அணிக்காக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறார். இது குறித்து குல்தீப் கூறியதாவது:

யார்க்ஷயர் அணியில் இணைவது மகிழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளப்பில் இணைவது சிறப்பு சலுகையாக இருக்கிறது.

இங்கிலாந்தில் விளையாடுவது எப்போதும் சவாலானது. அணியின் மேலாளர்களிடம் பேசியதும் எப்போது அணியில் இணைவேன் என்ற எதிர்பார்ப்பு இருகிறது எனக் கூறியுள்ளார்.

summary

Kuldeep Yadav signs for Yorkshire to play five One Day Cup and three red-ball games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments