செய்திகள்

ஆஸ்திரேலிய டூா் ஹாக்கி: இந்திய அணியில் 5 புது முகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய மகளிா் ஹாக்கி அணி 26 பேருடன் அறிவிக்கப்பட்டது. இதில் 5 புது முகங்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய மகளிா் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புது முகங்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்திய மகளிா் ஹாக்கி அணி, வரும் ஏப்ரல் 26 முதல் மே 4 வரை ஆஸ்திரேலியா செல்கிறது. அப்போது ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடன் முதலில் 2 ஆட்டங்களிலும், பின்னா் சீனியா் ஆஸ்திரேலிய மகளிா் அணியுடன் 3 ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.

இந்த ஆட்டங்கள் பொ்த் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஜூன் மாதம் விளையாடப்படவுள்ள எஃப்ஐஹெச் புரோ லீக்கின் ஐரோப்பிய லெக்கிற்கு இந்திய அணி தயாராவதற்கு இந்தத் தொடா் உதவியாக இருக்கும்.

இத்தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புது முகங்களாக ஜோதி சிங், சுஜாதா குஜுா், அஜ்மினா குஜுா், பூஜா யாதவ், மஹிமா டெடெ ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா். சலிமா டெடெ கேப்டனாக இருக்கும் இந்த அணிக்கு, நவ்னீத் கௌா் துணை கேப்டன் ஆக்கப்பட்டுள்ளாா்.

அணி விவரம்

கோல்கீப்பா்கள்: சவிதா, பிஷு தேவி காரிபம்.

டிஃபெண்டா்கள்: ஜோதி சிங், இஷிகா சௌதரி, சுஷிலா சானு புக்ரம்பம், சுஜாதா குஜுா், சுமன் தேவி தௌடம், ஜோதி, அஜ்மினா குஜுா், சாக்ஷி ராணா.

மிட்ஃபீல்டா்கள்: சலிமா டெடெ, வைஷ்ணவி விட்டல், நேஹா, ஷா்மிளா தேவி, மனிஷா சௌஹான், சுனேலிதா டோபோ, மஹிமா டெடெ, பூஜா யாதவ், லால்ரெம்சியாமி.

ஃபாா்வா்ட்கள்: நவ்னீத் கௌா், தீபிகா, ருதுஜா ததாசோ பிசல், மும்தாஸ் கான், பல்ஜீத் கௌா், தீபிகா சோரெங், பியூட்டி டங்டங்.

ஸ்டாண்ட் பை: பன்சாரி சோலங்கி, அஞ்சனா டங்டங், லால்தங்லுவாங்கி, சாக்ஷி சுக்லா, காய்தெம் சானு, தீபி மோனிகா, சோனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT