லீக்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி அணி பெனால்டி வாய்ப்பில் 5-4 என வென்றது.
லீக்ஸ் கோப்பை தொடரில் இன்டர் மியாமி அணியும் நெகாக்சா அணியும் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு மோதின.
இந்தப் போட்டியில் 8-ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் கீழே தள்ளியதால் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
இந்தப் போட்டியில் நெகாக்சா 33, 81ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முன்னிலை வகிக்க, இன்டர் மியாமி 12, 90+2 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தியது.
பின்னர், ஆட்டம் பெனால்டிக்கு சென்றது. இதில் இன்டர் மியாமி 5-4 என வென்று அசத்தியது.
இரு அணிகளிலும் தலா ஒரு வீரர் ரெட் கார்டு வாங்கி வெளியேறியதால் 10 பேருடன் விளையாடினார்கள்.
லீக்ஸ் கோப்பை புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகளுடன் இன்டர் மியாமி அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
டாப் 4 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும். இறுதிப் போட்டி ஆக.31ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
நடப்பு சாம்பியனாக (2023) இன்டர் மியாமி அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.