இங்கிலாந்தில் பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் அணியினர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், கடந்த ஜூலை 24 ஆம் தேதியில் பிரிட்டானியா மான்செஸ்டர் பகுதியில் பாகிஸ்தான் வம்சாவளிப் பெண்ணிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமையில் (ஆகஸ்ட் 4) பெக்கன்ஹாம் திடலில் விளையாடிக் கொண்டிருந்த ஹைதர் அலியை மான்செஸ்டர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இருப்பினும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், விசாரணைக்காக 2 வாரங்களுக்கு மான்செஸ்டரிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணையில் இருந்து ஹைதர் அலியின் பெயர் நீக்கப்படும் வரையில் அவரை அணியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.