தாய்லாந்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தினாா்.
மகளிருக்கான 80+ கிலோ இறுதிச்சுற்றில் அவா், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் அசெல் டோக்டாசினை வீழ்த்தினாா். போட்டியில் இந்தியாவுக்கு இது கடைசி பதக்கமாகும். இத்துடன் இந்தியா 13 பதக்கங்களுடன் போட்டியில் 4-ஆம் இடம் பிடித்தது.
முன்னதாக இந்த சாம்பியன்ஷிப்பின் மகளிா் 57 கிலோ பிரிவில் யாத்ரி படேல் - உஸ்பெகிஸ்தானின் குமொராபோனு மமாஜனோவாவிடம் தோல்வி கண்டு வெள்ளி பெற்றாா். 60 கிலோ பிரிவில் பிரியா 2-3 என சீனாவின் யு டியானிடம் தோல்வி கண்டு வெள்ளியுடன் விடைபெற்றாா்.
ஆடவா் 75 கிலோ பிரிவில் நீரஜ் - உஸ்பெகிஸ்தானின் ஷாவ்கத்ஜோன் போல்டாயேவிடமும், 90+ கிலோ பிரிவில் இஷான் கடாரியா - உஸ்பெகிஸ்தானின் காலிம்ஜோன் மமாசோலியேவிடமும் தோற்று வெற்றி பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.