செய்திகள்

2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு மே. தீவுகள் பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொா்த் லீவிஸ் முறையில் வெற்றி

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 37 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்க்க, மழை காரணமாக அதன் இன்னிங்ஸ் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னா் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 35 ஓவா்களில் 181 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, அந்த அணி 33.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் சயிம் அயுப் 23, அப்துல்லா ஷஃபிக் 26, பாபா் ஆஸம் 0, கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஹுசைன் தலத் 31, சல்மான் அகா 9, முகமது நவாஸ் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இன்னிங்ஸ் முடிவில் ஹசன் நவாஸ் 3 சிக்ஸா்களுடன் 36, ஷாஹீன் அஃப்ரிதி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேடன் சீல்ஸ் 3, ஜெடாயா பிளேட்ஸ், ஷமாா் ஜோசஃப், குடாகேஷ் மோட்டி, ராஸ்டன் சேஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 181 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிராண்டன் கிங் 1, எவின் லீவிஸ் 7, கீசி காா்டி 16, கேப்டன் ஷாய் ஹோப் 32, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், ராஸ்டன் சேஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 49, ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலா்களில் ஹசன் அலி, முகமது நவாஸ் ஆகியோா் தலா 2, அப்ராா் அகமது 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

குழப்பம் நீங்கும் விருச்சிகத்துக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT