~வெற்றி மகிழ்ச்சியில் ஷில்லாங் வீரா்கள். 
செய்திகள்

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் ஷில்லாங் லஜோங்

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது.

நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பையின் 134ஆவது ஆண்டு போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஷில்லாங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதியில் ஷில்லாங் லஜோங் எஃப்சி- இந்திய கடற்படை அணிகள் பங்கேற்றன.

முதல் பாதியில் இந்திய கடற்படை அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியதால், 35-ஆவது நிமிஷத்தில் லஜோங் கேப்டன் பாஸ்கா் ராய் அடித்த லாங் பாஸை வழிமறித்த கடற்படை வீரா் ரோஷன் பன்னா அதை திருப்பி அனுப்ப விஜய் மராண்டி அற்புதமாக கோலாக்கினாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஷில்லாங் அணியினா் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோலடிக்கும் முனைப்பில் ஈடுபட்டனா். 69-ஆவது நிமிஷத்தில் அந்த அணி வீரா் டமைட்பேங் லிங்டோ அற்புதமாக கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். தொடா்ந்து 79-ஆவது நிமிஷத்தில் எலா்பிரைட்டன் சனா பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினாா்.

இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஷில்லாங் அணி மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT