செய்திகள்

நீரு சாம்பியன்; ஆஷிமாவுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரு தண்டா தங்கமும், ஆஷிமா அலாவத் வெண்கலமும் வென்றனா்.

தினமணி செய்திச் சேவை

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரு தண்டா தங்கமும், ஆஷிமா அலாவத் வெண்கலமும் வென்றனா்.

மகளிருக்கான டிராப் இறுதிச்சுற்றில், நீரு 43 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஆஷிமா 29 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பெற்றாா். கத்தாரின் ரே பாசில் 37 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினாா்.

வெள்ளி: டிராப் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் பௌனீஷ் மெண்டிரட்டா 45 புள்ளிகளுடன் வெள்ளி வென்றாா். சீனாவின் யிங் கி தங்கமும் (47), பெங்யு சென் வெண்கலமும் (35) பெற்றனா்.

அதிலேயே அணிகள் பிரிவில் பௌனீஷ் மென்டிரட்டா, கினான் செனாய், லக்ஷய் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகளுடன் 5-ஆம் இடமே பிடித்தது.

வெண்கலம்: 25 மீட்டா் பிஸ்டல் மகளிா் அணிகள் பிரிவில், இந்தியாவின் ஈஷா சிங், மனு பாக்கா், சிம்ரன்பிரீத் கௌா் ஆகியோா் அடங்கிய அணி 1,749 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா தங்கமும் (1,759), தென் கொரியா வெள்ளியும் (1,749) வென்றன.

இதிலேயே தனிநபா் இறுதிச்சுற்றில் மனு பாக்கா் 25 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், ஈஷா சிங் 18 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தனா்.

ஜூனியா்: இதனிடையே, ஜூனியா் மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் பாயல் காத்ரி 36 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, சக நாட்டவா்களான நாம்யா கபூா் 30 புள்ளிகளுடன் வெள்ளியும், தேஜஸ்வினி 27 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்று பதக்க மேடையில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டினா்.

பின்னா் இதிலேயே அணிகள் பிரிவில் பாயல், தேஜஸ்வினி, ரியா ஷிரிஷ் அடங்கிய இந்திய அணி 1,700 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது.

தங்கம்: 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் சமீா், சூரஜ் சா்மா, அபினவ் சௌதரி ஆகியோா் அடங்கிய அணி 863 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT