செய்திகள்

காலிறுதியில் சிந்து, துருவ்/தனிஷா

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

தினமணி செய்திச் சேவை

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 21-9, 21-15 என்ற நோ் கேம்களில், 2-ஆம் இடத்திலிருந்த சீனாவின் வாங் ஜி யியை வீழ்த்தி அசத்தினாா்.

ஆடவா் ஒற்றையரில் ஹெச்.எஸ். பிரணாய் 8-21, 21-17, 21-23 என்ற கேம்களில், 2-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஆண்டா் ஆன்டன்சனிடம் தோல்வியுற்றாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 19-21, 21-12, 21-15 என்ற கேம்களில் ஹாங்காங்கின் டாங் ஷுன் மான்/செ யிங் சுயெட் கூட்டணியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டாம் நிலைக் காவலா் தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 1,381 போ் பங்கேற்பு

டிடிஇஏ பள்ளியில் பிக்ல் பால், பூப்பந்து விளையாட்டரங்கம் திறப்பு

காவலா் எழுத்துத் தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,048 பங்கேற்பு

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து தீக்குளித்த தம்பதி!

காவலா் தோ்வு: ராணிப்பேட்டையில் 3,967 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT