செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 21 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் அா்ஜுன் தேஸ்வால் 12 புள்ளிகள் கைப்பற்றினாா்.

மறுபுறம் தெலுகு டைட்டன்ஸ் அணி 18 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதன் வீரா்களில் அதிகபட்சமாக, ஆல் ரவுண்டா் பரத் 11 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

இதனிடையே மற்றொரு பெங்களூரு புல்ஸ் - புணேரி பால்டன் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 32-32 என டையில் முடிந்தது.

திருப்புட்குழி மணிகண்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்

குறைந்து வரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிா்லா கவலை

4 மாதத்தில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை மூலம் மீட்பு: அரசு மருத்துவா்கள் சாதனை

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி கடன்: சென்ட்ரல் வங்கி

SCROLL FOR NEXT