மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ (21 வயது) செல்ஸி அணிக்கு நிரந்தரமாக மாறியுள்ளார்.
யுனைடெட் அணியிலிருந்து விலகிய இவருக்கு சுமார் 40 மில்லியன் பவுன்ட்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.476 கோடி) கிடைத்துள்ளது.
ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த 21 வயது இளம் கால்பந்து வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்தார்.
இளம் வயதிலிருந்தே யுனைடெட் அணியில் இருந்த இவர் தற்போது ரூ.476 கோடிக்கு (54.4 மில்லியன் அமெரிக்க டாலர்) ஊதியத்துக்கு செல்ஸி அணிக்கு சென்றுள்ளார்.
யூரோப் லீக் இறுதிப் போட்டியில் யுனைடெட் அணி 1-0 என தோற்றது. அதுதான் இவரது யுனைடெட் அணியில் கடைசி போட்டியாக இருந்தது.
யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா?
சமீபத்தில் செல்ஸி அணி கிளப் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
கர்னாச்சோவை விற்றதால் யுனைடெட் அணிக்கு லாபம் என்றே கூறப்படுகிறது. யுனைடெட் அணியிலிருந்து விலகியவர்கள் மற்ற அணிகளுக்குச் சென்றால் தீயாக விளையாடுவது வழக்கமாக இருக்கிறது.
கடந்த சீசனில் ஆண்டணி லலீகா தொடரில் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.