சென்னை: ஹெச்சிஎல் இந்தியன் டூர் 4 ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு புதன்கிழமை தகுதிபெற்றனர்.
ஆடவர் பிரிவு காலிறுதியில், நடப்பு தேசிய சாம்பியனான வேலவன் செந்தில்குமார் 11-9, 11-3, 11-5 என்ற நேர் கேம்களில், ஆஸ்திரேலியாவின் ஜோசப் வைல்ட்டை வீழ்த்தினார். எனினும் வீர் சோட்ரனி 9-11, 7-11, 8-11 என எகிப்தின் ஆடம் ஹாவலிடம் தோல்வி கண்டார்.
மகளிர் பிரிவில், தேசிய சாம்பியனாக இருக்கும் அனாஹத் சிங் 11-2, 11-2, 11-8 என்ற நேர் கேம்களில், ஜப்பானின் அகாரி மிடோரிகவாவை மிக எளிதாக வெளியேற்றினார். தன்வி கன்னா 7-11, 12-10, 14-12, 7-11, 11-4 என, ஹாங்காங்கின் நிகா சிங் செங்கை போராடி வென்றார்.
ஜோஷ்னா சின்னப்பா 6-11, 11-7, 5-11, 11-6, 11-7 என்ற வகையில் எகிப்தின் நார்டின் கராஸை சாய்த்தார். அரையிறுதியில் ஜோஷ்னா, சக இந்தியரான தன்வி கன்னாவை சந்திக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.