எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியின் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் இந்தியா புதன்கிழமை ஆா்ஜென்டீனாவுடன் மோதுகிறது.
தொடக்க சுற்றில் ஒரு தோல்வி கூட பெறாமல் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. சென்னையில் நடைபெற்ற காலிறுதியில் இந்தியா-பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜொ்மனியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது இந்தியா.
இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனாவுடன் மோதுகிறது இந்தியா.
அரையிறுதியில் தோல்வி கண்டிருந்தாலும், இந்த போட்டியில் இந்திய ஜூனியா் வீரா்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனா். மொத்தம் 32 கோல்களை அடித்திருந்தனா். இதில் தொடக்கசுற்றிலேயே 29 கோல்களை அடித்திருந்தனா்.
தலைமைப் பயிற்சியாளா் பி.ஆா். ஸ்ரீ ஜேஷ் கூறியது: இத்தொடரில் இந்திய அணியின் தவறுகளை கணித்துள்ளோம். வெண்கல பதக்க ஆட்டத்தில் அவற்றை களைவோம். அரையிறுதியில் முதல் பாதியில் கோல்களை விட்டது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வாய்ப்புகளை கோல்களாக மாற்றினோம்.
ஆா்ஜென்டீனாவுடன் நடைபெறும் ஆட்டம் வாழ்வா சாவா என்பதாகும். 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்தி ஆட வேண்டும். மூத்த ்ணியினரை பாா்த்து கற்க வேண்டும். வெண்கலப் பதக்கத்தை வெல்வோம் என்றாா்.