செய்திகள்

ஆட்டத்துக்கு இரு முறை "டிரிங்க்ஸ்' இடைவேளை

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தின் முதல் மற்றும் 2-ஆம் பாதியில் 3 நிமிஷங்கள் "டிரிங்க்ஸ்' இடைவேளை விடப்படும் என ஃபிஃபா அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தின் முதல் மற்றும் 2-ஆம் பாதியில் 3 நிமிஷங்கள் "டிரிங்க்ஸ்' இடைவேளை விடப்படும் என ஃபிஃபா அறிவித்தது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், சில ஆட்டங்களின்போது வெப்பம் காரணமாக வீரர்கள் பாதிக்கப்பட்டனர். அதனடிப்படையில் இந்த முடிவை ஃபிஃபா தற்போது மேற்கொண்டுள்ளது.

2026 உலகக் கோப்பை போட்டிக்கான ஃபிஃபா தலைமை அதிகாரி மனோலோ ஜுபிரியா, போட்டி ஒளிபரப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தின்போது இதை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆட்டங்கள் நடைபெறும் இடங்களின் வெப்பநிலை எப்படி இருந்தாலும், மைதானங்கள் கூரை மற்றும் குளிர் சாதன வசதி கொண்டவையாக இருந்தாலும் இந்த இடைவேளை பொருந்தும்.

முதல் மற்றும் 2-ஆம் பாதிகளில் 22 நிமிஷங்களுக்குப் பிறகு இந்த "டிரிங்க்ஸ்' இடைவேளை விடப்படும். எனினும், அந்த நேரத்தை ஒட்டி காயம் போன்ற காரணங்களால் ஆட்டம் நிறுத்தப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு டிரிங்க்ஸ் இடைவேளை நேரத்தை சற்று தாமதமாக கள நடுவர்கள் அறிவிக்கலாம். அதை களத்திலேயே நடுவர்கள் முடிவு செய்துகொள்ளலாம்' என்றார்.

விளம்பர காரணங்களுக்காக, இந்த இடைவேளை ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT