செய்திகள்

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: ஆஸ்திரேலியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா வெற்றி

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பிரேஸில், தென்னாப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்றன.

தினமணி செய்திச் சேவை

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பிரேஸில், தென்னாப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்றன.

உலக ஸ்குவாஷ், எஸ்ஆர்எஃப்ஐ, எஸ்டிஏடி சார்பில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக இரண்டாவது நாளான புதன்கிழமை ஆட்டங்கள் நடைபெற்றன.

1996 சாம்பியன் ஆஸ்திரேலியா, குரூப் சி பிரிவில் போலந்து அணியை 3-1 என வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

குரூப் பி பிரிவில் பிரேஸில்=சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் பிரேஸில் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், 1-1 என சமன் செய்தது. இறுதியில் 2-2 என ஆட்டத்தை சமன்செய்தது பிரேஸில். இதனால் வியாழக்கிழமை இந்தியாவுக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் நான்கு ஆட்டங்களில் குறைந்தது 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது பிரேஸில்.

குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா 3-1 என கொரியாவை வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் எகிப்து குரூப் டி பிரிவில் ஈரானை 4-0 என வீழ்த்தி வெற்றியை ஈட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் வெளியீடு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணி வாகனம் மீது மோதிய கார்! பணியாளர்கள் காயம்! | Chennai

நடுவரை துரத்தி துரத்தி அடித்த வீரர்கள்... பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் மோதல்!

பாரதி இருந்திருந்தால் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார்! தமிழிசை

விடுமுறையை கொண்டாட சென்ற அய்யனார் துணை தொடர் நடிகர்கள்!

SCROLL FOR NEXT