மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் முன்னாள் லிவர்பூல் வீரரை கிண்டல் செய்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த முன்னாள் வீரர்தான் சமீபத்தில் முகமது சாலாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி ரியல் மாட்ரிட்டை அதன் சொந்த மண்ணில் 2-1 என வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் சிட்டி அணியின் எர்லிங் ஹாலண்ட் 43-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.
சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேகமாக 50 கோல்களை அடித்த முதல் வீரராக எர்லிங் ஹாலண்ட் சாதனை படைத்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இவரை நேர்காணல் எடுத்தார்கள்.
அந்த நிகழ்வில் முன்னாள் லிவர்பூல் லெஜெண்ட் ஜேமி கர்ரேகரும் இருந்தார். இவர்தான் முகமது சாலாவை கடுமையாக விமர்சித்தவர்.
எர்லிங் ஹலண்ட் பேசியதாவது:
ஸ்டீடியோவில் கர்ரேகர் இருப்பதைப் பார்த்ததும் எனக்கு பதற்றமாக இருக்கிறது (சிரிக்கிறார்).
ரூடிகரா ? (ரியல் மாட்ரிட் வீரர்), கர்ரேகரா? யார் எனக்கு இப்போதைக்கு வேண்டும் எனக் கேட்டால் நான் ரூடிகரைச் சொல்லுவேன். ஏனெனில் கர்ரேகர் சிறிது பைத்தியக்காரன் போன்றவர். அவரை கணிக்கவே முடியாது என்றார்.
இதைக் கேட்ட கர்ரேகரும் உடன் சிரிப்பார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் சாதனைகள் குறித்து, “சிட்டியில் அதிக நாள்கள் விளையாடுவேன். மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். வீரர்கள் ஒத்துழைக்கிறார்கள். இரண்டுக்கும் இடையில் இருப்பதை படித்துக்கொள்ளுங்கள்.
இருந்தும் நான் மிகவும் தன்னடக்கமாக இருக்கிறேன். அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.