சீனாவில் புதன்கிழமை தொடங்கிய உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக், சிராக் இணை 12-21, 22-20, 21-14 என்ற கேம்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் சீனாவின் வெய் கெங் லியாங், சாங் வாங் கூட்டணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 1 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.
இந்த சீன ஜோடியை சாத்விக், சிராக் இணை 11-ஆவது முறையாக சந்தித்த நிலையில், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. குரூப் ‘பி’-யில் இருக்கும் இந்த இந்திய ஜோடி, அடுத்த ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஃபஜா் அல்ஃபியான், முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி இணையின் சவாலை சந்திக்கிறது.
நடப்பு பாட்மிண்டன் காலண்டரின் கடைசி போட்டியான உலக டூா் ஃபைனல்ஸுக்கு, இந்தியாவிலிருந்து சாத்விக், சிராக் இணை மட்டும் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.