மெஸ்ஸ்ஸியின் வருகைக்காக கோடிக்கணக்கில் செலவிடுபவர்கள் இந்திய கால்பந்தில் முதலீடு செய்ய தயங்குவது ஏன் என அணியின் கேப்டன் சந்தேஷ் ஜிங்கன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்றுநாள் சுற்றுப் பயணமாக வந்திருந்தார்.
கோட் டூர் ஆஃப் இந்தியா...
கொல்கத்தாவில் தனது 70 அடி சிலையை திறந்துவைத்த மெஸ்ஸியைக் காண சால்ட் லேக் திடலில் கூட்டம் கூடியது. பின்னர் அங்கு கலவரமே வெடித்தது.
மெஸ்ஸி கொல்கத்தாவைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, தில்லியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
திடீரென இந்தியாவில் கால்பந்துக்கென ரசிகர்கள் அதிகமாக இருப்பதாகத் தென்பட்டது.
உள்ளூர் கால்பந்து போட்டிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கால்பந்து அணியின் கேப்டன் சந்தேஷ் ஜிங்கன் கூறியதாவது:
அழியும் இந்திய கால்பந்து, கோடிக்கணக்கில் மெஸ்ஸிக்கு செலவு...
கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கால்பந்தைக் கொண்டாடிய களிப்புணர்ச்சியைக் கண்டு எனக்கு சில விஷயங்களைக் கூறவேண்டுமெனத் தோன்றியது.
முதலாவதாக, இந்தியாவில் காலந்தை நேசிக்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. திடல் முழுவதும் ரசிகர்கள் வந்து, லட்சங்கள் கொடுத்து பார்ப்பதையும் பார்க்க நன்றாக இருந்தது.
எனக்கு என்ன உறுத்தல் என்றால், இந்தியாவின் கால்பந்து விளையாட்டுகளே அழியும் நிலையில் இருக்கும்போது அதை ஏன் யாருமே கண்டுக்கொள்ளவில்லை.
இந்திய கால்பந்தில் யாரும் முதலீடு செய்யாததால் அனைத்து போட்டிகளும் முடங்கியுள்ள நிலையில், எப்படி மெஸ்ஸி டூருக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது?
பிடிக்கும் ஆனால் ஆதரவு தராதது ஏன்?
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நாங்கள் விளையாட்டை நேசிக்கிறோம்; ஆனால், சொந்த வீரர்களுக்கு ஆதவு அளிக்கமாட்டோம் என்பதுதான் புரிகிறது.
எங்கள் மீதான விமர்சனம் மீது நான் விழிப்புணர்வுடனே இருக்கிறேன். சரியாக விளையாட வேண்டுமென்ற பொறுப்பு எனக்கிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தப் போட்டியைப் புரிந்தவர்கள் இதற்கான கட்டமைப்பு இருக்கிறதா? தொடர்ந்து விளையாட முடியுமா என்ற சூழலையும் புரிந்துகொள்ள வேண்டும். அதெல்லாம் களத்தில் எங்களைப் பாதிக்கிறது.
எங்களக்கு நல்ல காலங்கள் இருந்துள்ளன. மீண்டும் அதைக் கொண்டுவருவோம். உண்மையாகவே, பல விஷயங்களை எனக்குள் கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.
பலரும் தங்கள் கனவை நனவாக்கிக் கொண்டது மகிழ்ச்சி. இது கால்பந்தைப் பிடிக்கும் என்பதுடன் நிற்காமல், சொந்த மண்ணில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் என்ற உரையாடலையும் ஏற்படுத்துமென நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.