பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியின் வீரர் எர்லிங் ஹாலண்ட் (25 வயது) புதிய சாதனை படைத்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட 50 சதவிகிதத்துக்கும் குறைவான போட்டிகளில் விளையாடி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி...
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியும் நேற்றிரவு மோதின.
இந்தப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 5, 69-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.
இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 3-0 என அசத்தல் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் இந்த அணி இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலமாக 114 போட்டிகளில் ஹாலண்ட் 104 கோல்களை நிறைவு செய்துள்ளார்.
50% குறைவான போட்டிகளில் சாதித்த ஹாலண்ட்...
கிறிஸ்டியானோ ரொனால்டோ 236 பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி 103 கோல்கள் அடித்திருந்தார்.
ரொனால்டோவை விட 50சதவிகிததுக்கும் குறைவான போட்டிகளில் அவரது சாதனையை எர்லிங் ஹாலண்ட் சுக்குநூறாக உடைத்துள்ளார்.
பிரீமியர் லீக் வரலாற்றில் ஆலன் ஷீரர் 260 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அதிவேகமான 50, 100 கோல்களை நிறைவுசெய்துள்ள எர்லிங் ஹாலண்ட் இந்த சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.