பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரஃபீனியா தனது சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு அவரது சொந்த ஊரில் இருக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் உடைமைகளை வழங்கியுள்ளார்.
பார்சிலோனாவின் விடாமுயற்சி நாயகன்
பார்சிலோனா அணிக்காக விளையாடும் கேப்டன் ரஃபீனியா கடந்த சீசனில் மட்டும் 34 கோல்கள், 23 அசிஸ்ட்டுகளைச் செய்து மூன்று கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்தார்.
இவருக்கு பேலந்தோர் (தங்கப் பந்து) விருது கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டு, டாப் 3-இலும் வராமல் ஐந்தாவது இடத்துக்குச் சென்றது பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
சமீபத்தில் இவரை ஃபிஃபா சிறந்த பிளேயிங் லெவன் 2025 அணியிலும் எடுக்காதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
இவரது மனைவி, “என் கணவர் கால்பந்து விளையாடாமல் கூடைப் பந்து எதுவும் விளையாடுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
பசி, பிச்சை - பிரேசில் நாயகன்
ரஃபீனியா தனது இளமைக் காலத்தில் உணவில்லாமல் பிச்சை எடுத்ததாகக் கூறியிருந்த நிலையில், தற்போது பலருக்கும் உதவும் நிலைக்கு முன்னேறியுள்ளார்.
தனது மனைவியுடன் சேர்ந்து பிரேசிலில் சென்று மக்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடியோவில் குழந்தைகள் அவரிடம் மிகுந்த அன்போடு ஓடிவரும் காட்சிகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
ஒருகாலத்தில் பசியினால் திருடி, பிச்சை எடுத்து வந்த ரஃபீனியா தற்போது தனது கடின உழைப்பினால் பிரேசில் நாட்டிற்கே நாயகனாக உயர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.