போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
40 வயதாகும் ரொனால்டோ 2025ஆம் ஆண்டில் மட்டுமே 40 கோல்களை நிறைவுசெய்துள்ளார்.
சௌதி புரோ லீக்கில் அல்-நாசர் அணியும் அல்-ஓக்தூத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ 31, 45+3-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.
ஜாவோ ஃபெலிக்ஸ் 90+4-ஆவது நிமிஷத்தில் அசத்தல் கோல் அடிக்க, 3-0 என அல்-நாசர் அணி வென்றது. இத்துடன் புள்ளிப் பட்டியலில் 30 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலமாக 14 முறையாக ஓராண்டில் 40-க்கும் அதிகமான கோல்களை அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.
மொத்தமாக 956 கோல்களை அடித்துள்ளார். விரைவில் 1,000 கோல்களை அடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ரொனால்டோவின் கோல்கள் விவரம்
2010 — 48 கோல்கள்
2011 — 60 கோல்கள்
2012 — 63 கோல்கள்
2013 — 69 கோல்கள்
2014 — 61 கோல்கள்
2015 — 57 கோல்கள்
2016 — 55 கோல்கள்
2017 — 53 கோல்கள்
2018 — 49 கோல்கள்
2020 — 44 கோல்கள்
2021 — 47 கோல்கள்
2023 — 54 கோல்கள்
2024 — 43 கோல்கள்
2025 — 40 கோல்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.