இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகளில் கோப்பை வெல்லப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
தற்போதைக்கு மும்முனைப் போட்டியாக அமைந்துள்ளது. ஆர்செனல் - மான்செஸ்டர் சிட்டி - ஆஸ்டன் வில்லா ஆகிய அணிகள் ஒன்றையொன்று முந்தி வருகின்றன.
நேற்றைய பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என நியூ கேஷ்டல் அணியை வீழ்த்தியது.
மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என நொட்டிங்கம் ஃபாரஸ்ட் அணியை வீழ்த்தியது.
நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணி 2-1 என ஓல்விஸ் அணியை வீழ்த்தியது.
ஆர்செனல் 2-1 என பிரைடன் அணியை வீழ்த்த, ஆஸ்டன் வில்லா செல்ஸியை 2-1 என வீழ்த்தி அசத்தியது.
ஆஸ்டன் வில்லா அணி தொடர்ச்சியாக 11 வெற்றிகள் பெற்று அந்த கிளப்பின் அதிகபட்ச வெற்றியை சமன்செய்துள்ளது.
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்செனல் - 42 புள்ளிகள்
2. மான்செஸ்டர் சிட்டி - 40 புள்ளிகள்
3. ஆஸ்டன் வில்லா - 39 புள்ளிகள்
4. லிவர்பூல் - 32 புள்ளிகள்
5. செல்ஸி - 29 புள்ளிகள்
6. மான்செஸ்டர் யுனைடெட் - 29 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.