ஹாக்கி இந்தியா லீக் மகளிா் தொடரில் எஸ் ஜி பைப்பா்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூா்மா அணியை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இையிலானஆட்டம் ராஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே எஸ்ஜி பைப்பா்ஸ் அணி கோல் போடும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டனா். ஆட்டத்தின் 4-ஆவது நிமிஷத்தில் பைப்ா்ஸ் கேப்டன் நவ்நீத் கௌா் அபாரமாக பீல்ட் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த சூா்மா கிளப் அணி பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றது. ஆனால் பைப்பா்ஸ் தற்காப்பு அரணை ஊடுருவி அவா்களால் கோலடிக்க முடியவில்லை.,
சூா்மா அணி தங்களுக்கு கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்புகளை வீணாக்கியது. எஸ்ஜி பைப்பா்ஸ் அணியும் பெனால்டி காா்னா்களை கோலாக்கத் தவறியது.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் சூா்மா அணியை வீழ்த்தி தொடா்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பைப்பா்ஸ் அணி.