கிளியன் எம்பாப்பே படம்: ஏபி
செய்திகள்

எம்பாப்பே ஹாட்ரிக் கோல்..! மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இருந்து மான்செஸ்டர் சிட்டி வெளியேறியது.

DIN

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இருந்து மான்செஸ்டர் சிட்டி வெளியேறியது.

ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பிளே-ஆஃப் லெக் 2 போட்டியில் ரியல் மாட்ரிட் அணி மான்செஸ்டர் சிட்டியை 3-1 என வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாப்பே 4,33,61ஆவது நிமிஷங்களில் தொடர்ச்சியாக கோல் அடித்து அசத்தினார்.

மான்செஸ்டர் சிட்டி ஏற்கனவே நடந்த லெக் 1 போட்டியில் தோல்வியுற்றது. இதனால் சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறியது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி ரவுன்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லீங் ஹாலண்ட் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

எம்பாப்பே

ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT