கார்ல்சென், நெபோம்னியச்சி. படம்: ஃபிடே
செய்திகள்

உலக பிளிட்ஸ் செஸ்: முதல்முறையாக இருவர் சாம்பியன்!

உலக செஸ் வரலாற்றில் முதல்முறையாக இருவர் உலகக் கோப்பையை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

DIN

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்கள்.

போட்டியின் முக்கிய கட்டமான நாக்-அவுட் சுற்றில் வென்ற ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, நார்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில் இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.

வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கார்ல்சென் 7 முறை பிளிட்ஜ் செஸ் கோப்பையை வென்றிருந்த நிலையில் தற்போது 8ஆவது முறையாக வென்றிருக்கிறார்.

ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி முதல் முறையாக பிளிட்ஸ் செஸ் கோப்பையை வென்றுள்ளார்.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 3.5 புள்ளிகளில் வென்று சாம்பியன் ஆனார்.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 3.5 புள்ளிகளில் வென்று சாம்பியன் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

SCROLL FOR NEXT