காயத்தால் அவதியுற்ற ஜோகோவிச்.  படம்: ஏபி
செய்திகள்

காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!

ஜோகோவிச் ஆஸி. ஓபன் அரையிறுதிப் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

DIN

ஆஸி. ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோவிச், ஸ்வெரெவ் மோதினார். காயத்தினால் அவதியுற்ற ஜோகோவிச் பாதியிலேயே வெளியேறினார்.

50ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய நோவக் ஜோகோவிச் துரதிஷ்டமாக காயத்தினால் தனது 25ஆவது பட்டத்தை வெல்ல முடியாமல் வெளியேறினார்.

காலிறுதியில் சிறப்பாக விளையாடிய ஜோகோவி 3-1 என காயத்துடனே விளையாடி அல்கராஸை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச், ஸ்வெரெவ்.

முதல் செட் டை பிரேக்கரில் ஸ்வெரெவ் 7-6 (5) என வென்றார். அடுத்த செட்டை விளையாட முடியாமல் ஜோகோவிச் வெளியேறியதுக்கு மக்கள் செய்த செயலுக்கு ஸ்வெரெவ் கண்டனம் தெரிவித்தார்.

அரையிறுதியில் காயத்தினால் அவதியுற்ற ஜோகோவிச்சை பார்வையாளர்கள் கிண்டல் செய்தனர். பின்னர் அவர் வெளியேறும்போது இரண்டு கைகளிலும் தம்ஸ் அப் காட்டிவிட்டு சென்றார்.

மரியாதை தாருங்கள்

ஸ்வெரெவ் பேசியதாவது:

முதலில் நான் சொல்ல வேண்டியது, காயத்தினால் ஒரு வீரர் வெளியேறும்போது தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள். 5 செட் போட்டிகளைப் பார்க்க அனைவரும் டிக்கெட் எடுத்து வந்திருப்பீர்கள். ஆனால், ஜோகோவிச் டென்னிஸ்ஸுக்காக 20 வருடம் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

காயத்துடனே பட்டங்களை வென்றவர். அவராலே இந்தப் போட்டியை விளையாட முடியாவிட்டால் நிச்சயமாக அது பெரிய காயமாகத்தான் இருக்கும். அதனால் அவரை மரியாதையாக நடத்துங்கள். அவரிடம் சிறிது அன்பைக் காட்டுங்கள் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT