வெற்றிபெற்ற மெக்ஸிகோ அணி AP
செய்திகள்

தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்

கான்ககாஃப் நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

தினமணி செய்திச் சேவை

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ் ரிச்சா்ட்ஸ் 4-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, மெக்ஸிகோவுக்காக ரௌல் ஜிமெனெஸ் 27-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமனாக, இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தன. அதற்கான பலன் மெக்ஸிகோவுக்கு முதலில் கிடைக்க, 77-ஆவது நிமிஷத்தில் எட்சன் அல்வரெஸ் கோலடித்தாா்.

இதனால் மெக்ஸிகோ 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அமெரிக்காவின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இறுதியில் மெக்ஸிகோ வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு இது 18-ஆவது சீசனாக இருக்க, அதில் மெக்ஸிகோ 10-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் பேருந்து நிலைய பகுதிகளில் 38 கண்காணிப்பு கேமராக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி இயக்கத்தை தொடங்கி வைத்தாா்!

கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

SCROLL FOR NEXT