மெஸ்ஸியுடன் டீ பால். இன்டர் மியாமி ஜெர்ஸியுடன்...  படங்கள்: இன்ஸ்டா / இன்டர் மியாமி
செய்திகள்

இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!

இன்டர் மியாமி அணியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் ஆர்ஜென்டீன வீரர் ரோட்ரிகோ டீ பால் இணைந்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டீ பால் (வயது 31) மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார்.

கடைசியாக அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடிவந்த இவர் தற்போது இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.

மெஸ்ஸியுடன் டீ பால்.

ஏற்கெனவே, இந்த அணியில் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவர்கள் இருவர் சிறந்த நண்பர்கள்.

களத்தில் மெஸ்ஸிக்கு எதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக வருவதில் ரோட்ரிகோ டீ பால் புகழ்ப்பெற்றவர்.

கால்பந்து ரசிகர்கள் இவரை மெஸ்ஸியின் பாதுகாவலன் என்றெல்லாம் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

அத்லெடிகோ மாட்ரிட் அணியில் இருந்து 6 மாதம் கடனில் இன்டர் மியாமிக்காக விளையாட வந்திருக்கிறார்.

மொத்தமாக 400க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 57 கோல்கள், 13,108 முறை பந்தினை வெற்றிகரமாக பாஸ் செய்து அசத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு அப்டேட்!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: 7 சிலைகள் உடைப்பு!

தாதா சாகேப் பால்கே விருது! ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மோகன்லால் நன்றி!

SCROLL FOR NEXT