ரிஷப் பந்த் படம் | AP
செய்திகள்

5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகல்!

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்து விலகியுள்ளார்.

தினமணி செய்திச் சேவை

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்து விலகியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, இந்திய துணை கேப்டன் ரிஷப் பந்த் வலது காலில் நேரடியாகத் தாக்கியது. வலியில் துடித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறி பின்னர் மறுநாள் அதே காயத்துடன் விளையாடினார்.

இருப்பினும் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை. அதனால் 4வது டெஸ்ட்டில் துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இந்த நிலையில் காயமடைந்த ரிஷப் பந்த் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ரிஷப் பந்த் 5வது போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

அவருக்குப் பதிலாக நாராயணன் ஜெகதீசன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவ்விரு அணிகளுக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து முக்கிய வீரர் ரிஷப் பந்த விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

India have added Narayan Jagadeesan to their squad for the fifth Test against England at The Oval as his cover.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வருவோருக்கு அடையாள அட்டை: பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடைமுறை

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆளுநா் விருதுகள் அறிவிப்பு

கரூா் சம்பவம்: 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திருச்சி மாநகர ஊா்க்காவல் படையில் 5 திருநங்கைகள்: பணி ஆணை வழங்கல்

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT