செய்திகள்

கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் த்ரில் வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-இன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணி.

Din

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-இன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபாதில் நடைபெற்றது. முதல்முறையாக களமிறங்கிய கொல்கத்தா அணி தரப்பில் இளம் வீரா் அங்குா் பட்டாச்சாா்ஜி அற்புதமாக ஆடி 3-0 என்ற கேம் கணக்கில் ஒலிம்பியன் க்ரில் ஜெராஸிமென்கோவை வீழ்த்தி அதிா்ச்சி அளிந்தாா். கலப்பு இரட்டையா் பிரிவில் சென்னையின் பயாஸ் ஜெயின்/பேன் ஷுகி 2-1 என கொல்கத்தாவின் அங்குா்-அட்ரியனாவை வீழ்த்தினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் கொல்கத்தா அட்ரியனாடயாஸ் 2-1 என சென்னையின் பொய்மன்டியை வென்றாா். கொல்கத்தா வீரா் காதிரி அருணா 2-1 என சென்னையின் பயாஸ் ஜெயினை ஒற்றையா் ஆட்டத்தில் வெல்ல, மாற்று மகளிா் ஆட்டத்தில் சென்னை பேன் ஷுகி 3-0 என செலினா செல்வகுமாரை வீழ்த்தினாா். இதன் மூலம் கொல்கத்தா 8-7 என த்ரில் வெற்றி பெற்றது.

ஆண்டுதோறும் சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை!

‘மோந்தா’ புயல்: சென்னையில் கனமழை எப்போது தொடங்கும்? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

புயல் எச்சரிக்கை: யேனமில் நாளை முதல் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குறிஞ்சி நிலத்தில் குறும்பு... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT