க்ளென் மேக்ஸ்வெல்  (கோப்புப் படம்)
செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு!

ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஓய்வு பற்றி...

DIN

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் தொடரில் ஓய்வுபெறும் முடிவை எடுத்திருக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 3,990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று, கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில், 126 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ள மேக்ஸ்வெல், 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்தியாவிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்தபோதே இந்த உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் ஆலோசனை நடத்திய மேக்ஸ்வெல், 2026 உலகக் கோப்பை தொடர்பாக பேசியுள்ளார். அதுவரை விளையாடுவேன் என நினைக்கவில்லை, ஆகையால் தன்னுடைய இடத்தை சிறந்த வீரரைக் கொண்டு நிரப்ப வேண்டிய நேரம் இது என முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

SCROLL FOR NEXT