செய்திகள்

புரோ கபடி லீக் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன ஆனில் மோகன்!

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

DIN

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை (மே 31) வீரா்கள் ஏலம் தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ஈரான் வீரா் முகமதுரேஸா ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். மேலும் 3-ஆவது முறையாக ரூ.2 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட முதல் வீரா் என்ற சிறப்பையும் அவர் பெற்றாா்.

பெங்கால் வாரியா்ஸ் அணி சாா்பில் தேவங்க் தலால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டாா். புதிய எஃப்பிஎம் விதியின்படி டபாங் டெல்லி அணி ரைடா் அஷு மாலிக்கை ரூ.1.9 கோடிக்கு மீண்டும் தருவித்தது.

தமிழ் தலைவாஸ் சாா்பில் ரூ.1.4 கோடிக்கு அா்ஜுன் தேஸ்வாலும், பெங்களூா் புல்ஸ் சாா்பில் ரூ.1.12 கோடிக்கு யோகேஷ் டாஹியாவும் வாங்கப்பட்டனா்.

முதல் நாளில் 10 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலத்தின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஹிமாசலைச் சேர்ந்த வீரரான ஆனில் மோகன், ரூ. 78 லட்சத்துக்கு யு மும்பாவால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியால் ரூ.50.10 லட்சத்திற்கு உதேய் பார்டே ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து ஆனில் மோகன் பேசியதாவது: புரோ கபடி லீக்கில் விளையாடுவது என்னுடைய கனவு. இப்போது அது நிறைவேறுகிறது. எனது கடின உழைப்பு மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னை தேர்ந்தெடுத்த யு மும்பாவுக்கு நன்றி. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். ஏற்கனவே பல ரெய்டிங் ஸ்டார்கள் மும்பா வழியாக வந்துள்ளனர். நானும் அவர்களின் பாதையில் செல்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT