ஜூலியன் அல்வரெஸ், மெஸ்ஸி களத்தில் வரும்போது கேப்டன் பொறுப்பு வழங்குதல்.  படம்: ஆர்ஜென்டீனா, ஏபி
செய்திகள்

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: சிலியை வீழ்த்தியது ஆர்ஜென்டீனா!

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் சிலியை வென்றது.

DIN

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா சிலியை வென்றது.

2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

தென்னமெரிக்க பிரிவில் இருக்கும் ஆர்ஜென்டீனாவும் சிலியும் மோதின. இதில் ஆர்ஜென்டீனா 1-0 என வென்றது.

இந்தப் போட்டியில் 16-ஆவது நிமிஷத்தில் ஜூலியன் ஆல்வரெஸ் கோல் அடித்து அசத்தினார்.

முதல் பாதியில் ஆர்ஜென்டீனா சிறப்பாக விளையாடியது. இரண்டாம் மீண்டெழுந்த சிலி இலக்கை நோக்கி 3 முறை அடித்தது. இருப்பினும் அவைகளை ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.

இரண்டாம் பாதியில்தான் (57') மெஸ்ஸி களத்தில் இறங்கினார். வந்ததும் கேப்டனுக்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போட்டி முடியும் வரை மெஸ்ஸி ஒரு கோல்கூட அடிக்கவில்லை. சிலி அணியும் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 1-0 என எளிமையாக ஆர்ஜென்டீனா வென்றது.

67 சதவிகித பந்தினை ஆர்ஜென்டீனா அணி தக்கவைத்துக் கொண்டது. 90 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்து அசத்தியது.

ஏற்கனவே, உலகக் கோப்பைக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெற்றுள்ள நிலையில் சிலி தனது வாய்ப்பை இழந்தது.

மொத்தம் 18 போட்டிகள் கொண்ட இந்தத் தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

சிலி 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதில் 10இல் 6 அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT