சிறந்த வீரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி.  படம்: எக்ஸ் / எம்எல்எஸ்
செய்திகள்

மே மாதத்திற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

எம்எல்எஸ் தொடரில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.

DIN

இன்டர் மியாமி வீரர் லியோனல் மெஸ்ஸி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.

மெஸ்சி அசத்தலால் கடந்த சீசனில் முதல்முறையாக எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி சப்போர்டர்ஸ் ஷீல்டு விருது வென்றது. அதனால், கிளப் உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்தமுறையும் இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி கேப்டனாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

மே மாதத்தில் 7 போட்டிகளில் 7 கோல்கள், 4 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

6 போட்டிகளாக தோல்வியைச் சந்தித்த இன்டர் மியாமி அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

புள்ளிப் பட்டியலில் இன்டர் மியாமி அணி 29 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

எம்எல்எஸ் தொடரில் மே மாதத்தில் சிறப்பாக விளையாடியதற்காக லியோனல் மெஸ்ஸி சிறந்த வீரராக தேர்வாகியுள்ளார்.

மொத்தமாக மெஸ்ஸி 865 கோல்களும் 384 அசிஸ்ட்களும் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT