முகப்பு
செய்திகள்

மெஸ்ஸிக்கு காயம்..! இன்டர் மியாமிக்கான முதல் போட்டியில் விளையாடுவாரா?

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறித்து...

Updated On : 12 பிப்ரவரி 2026, 5:44 pm IST
நட்பு ரீதியான போட்டியில் பங்கேற்ற லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இன்டர் மியாமியின் முதல் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சீசனில் இன்டர் மியாமி அணி மெஸ்ஸி தலைமையில் முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

Advertisement

Advertisement

மெஸ்ஸி வருகைக்குப் பிறகு முதல்முறையாக அந்த அணி சப்போர்டர்ஸ் ஷீல்டு, எம்எல்எஸ் கோப்பை, லீக்ஸ் கோப்பைகளை வென்றுள்ளது.

இந்த சீசனுக்கான முதல் போட்டி வரும் பிப்.21ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், மெஸ்ஸிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நிலைப் பொருத்தே அவர் முதல் போட்டியில் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நட்பு ரீதியான பிரீ சீசன் ஆட்டங்களில் மெஸ்ஸி கலந்துகொண்டு கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

Lionel Messi has a strained left hamstring, could affect availability for Inter Miami's opener.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.