தென் கொரியா கால்பந்து அணி.  படம்: எக்ஸ் / கேஎஃப்ஏ
செய்திகள்

தொடர்ந்து 11-ஆவது முறையாக உலகக் கோப்பைக்கு தேர்வான தென் கொரியா!

தென் கொரிய கால்பந்து அணி நிகழ்த்திய சாதனை குறித்து...

DIN

தென் கொரியா தொடர்ச்சியாக 11-ஆவது முறையாக ஃபிபா உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளது.

ஏஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) சார்பாக இதில் மொத்தம் 47 அணிகள் இருக்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தேர்வாகும்.

தற்போதைக்கு இதிலிருந்து ஜப்பான், ஜோர்டான், கொரியா ரிபப்ளிக், ஈரான், உஸ்பெகிஸ்தான் என 5 அணிகள் உறுதியாகியுள்ளன.

இராக் உடன் மோதிய தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் 76 சதவிகித பந்தினை தென் கொரியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

கால்பந்து உலகில் ஆசியாவில் இருந்து தொடர்ச்சியாக 11 முறை தகுதிபெற்ற ஒரே அணியாக சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக ஜப்பான் 8 முறை தேர்வாகியுள்ளது.

3 முறை நாக்-அவுட் சுற்றுக்கு சென்றுள்ள தென் கொரியா 2002-இல் அரையிறுதிக்கும் சென்றது. ஆசியாவிலேயே சிறந்த அணியாக இருக்கிறது.

பிரேசில் அணி மட்டுமே உலகக் கோப்பை தொடங்கிய 1930ஆம் ஆண்டில் இருந்து தகுதிபெற்ற ஒரே அணியாக இருக்கிறது. இருப்பினும், பிரேசில் 2026 உலகக் கோப்பைக்கு தேர்வாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

SCROLL FOR NEXT