ஏஞ்சலோஸ் ஆஞ்சே போஸ்டெகோக்லோ படம்: எக்ஸ் / டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்.
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்ல காரணமான பயிற்சியாளரை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டது குறித்து...

DIN

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் பயிற்சியாளர் ஏஞ்சலோஸ் ஆஞ்சே போஸ்டெகோக்லோ நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி சமீபத்தில் கைப்பற்றியது.

40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும். கடைசியாக 2008-இல் இங்கிலீஷ் லீக் கோப்பையையும், வென்றிருந்தது.

சுமார், 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுகொடுத்த பயிற்சியாளரை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

ப்ரீமியா் லீக் தொடரில் 22 போட்டிகளில் தோல்வியுற்றது 17-ஆவது இடத்தில் முடித்தது. இதனால், அந்த அணியின் உரிமையாளர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த போஸ்டெகோக்லோ (59) டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியில் 2023-இல் சேர்ந்தார்.

அடுத்ததாக இந்த அணிக்கு தாமஸ் பிராங்க் அல்லது மார்கோ சில்வாவை புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.

அடுத்த (2025-26) சீசனில் சாம்பியன்ஸ் லீக்கிற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதை வெல்லும் முனைப்பில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT